img/728x90.jpg
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு சாதனை - தமிழர் தேசத்தின் புதிய போராட்ட வடிவம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு சாதனை - தமிழர் தேசத்தின் புதிய போராட்ட வடிவம்

பொத்துவில் அம்பாறையில் ஒரு தொகையினர் போராட்டத்தை தலைமையேற்று ஆரம்பித்து நடாத்த ஒவ்வொரு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் போராட்டத்தை அஞ்சல் ஓட்டம் போன்று தடைகளை தாண்டி 703 km அப்பால் பொலிகண்டியில் சேர்த்தருக்கிறார்கள்.

இனம், மதம், அரசியல் வேறுபாடு களைந்து ஒன்றாக இந்த அஞ்சல் ஓட்டம் நடைபெற்று இருக்கின்றது. 8 மாவட்டங்களிலும் மக்கள் கணிசமான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் போராடிய போது வடகிழக்கு மக்களை இணைத்து தான் போராடினார்கள். அதன்பிறகு இப்போது தமிழர் தேசம் பல தசாப்தத்தின் பின்னர் அமைதி வழியில் போராட இணைந்திருக்கிறது.

இவ்வளவு காலமும் இந்த மக்களிடையே நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் அரசியல் செய்தோம், மாவட்டத்திற்குள் போராட்டம் செய்தோம், எதை செய்வது என்றாலும் வடக்கிற்கும், கிழக்கிற்கும் என தனித்தனியாக செய்தோம்.

ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி வடகிழக்கு மக்களை ஒன்றாக இணைத்திருக்கிறது. ஓரே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் பிரச்சினைகளையும் மற்றைய மாவட்டத்திற்கு கடத்தியிருக்கிறது. ஒவ்வொருவரையும் பிற மதம், இனத்தின் பிரச்சினைகளில் பங்கெடுக்க வைத்திருக்கிறது. அதற்காக போராட வைத்திருக்கிறது.

தமிழர் தாயகம் தனியே வடக்கும் யாழ்ப்பாணமும் அல்ல, கிழக்கும் சேர்த்து தான் தமிழ் தாயகம். இந்த தாயக கோட்டபாட்டை பல தசாப்தம் கழித்து P2P வலியுறுத்தியிருக்கிறது. பொலிசாரையும், இராணுவத்தையும் இளைஞர்கள் கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அவர்களது கொட்டத்தை அடக்கியிருக்கிறது. “பந்துல குணவர்த்தன” என்று துணிவுடன் பதில் சொல்ல வைத்திருக்கிறது.

நீதிமன்றங்களை மக்களுடைய முடிவுகளின்பால் தீர்பெழுத வைத்திருக்கிறது. அரசியல் தலைவர்களை களத்தில் இறக்கியிருக்கிறது. இவ்வாறு பலவற்றை சாதித்திருக்கிறது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி. இது ஒரு சாதனை தான். தமிழர் தேசத்தின் புதிய போராட்ட வடிவம் இது.