• :
  • :
களத்தில்

அன்னை பூபதியின் நினைவிடம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

அன்னை பூபதியின் நினைவிடம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

அன்னை பூபதியின் நினைவிடம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

 
அன்னை பூபதியின் நினைவாக எதிர் வரும் 18ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தொடர்பாக தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
 
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக எதிர் வரும் 18ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மட்டக்களப்பு கல்லடி – நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தொடர்பாக ஊடகங்களுக்கும் , பொதுமக்களுக்கும் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொஸ் ஒப் மீடியா அலுவலகத்தில் நடைபெற்றது .
 
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் முன்னெடுக்கின்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ள அன்னையின் நினைவு விசேட நிகழ்வில் நிகழ்வில் பிரதேச மக்கள் .புத்திஜீவிகள் , மாணவர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் ,இளைஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டு , நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்காக கொண்டு இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டத்தாக , தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே .பிரபாகரன் தெரிவித்தார்
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே .பிரபாகரன் , தேசத்தின் வேர்கள் அமைப்பின் சிரேஷ்ட ஆலோகர் பி . சின்னத்துரை ,தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்