• :
  • :
களத்தில்

உலக வரலாற்றிலே அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் முதல் பெண்மணி அன்னை பூபதி ! - தர்மலிங்கம் சுரேஸ்

உலக வரலாற்றிலே அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் முதல் பெண்மணி அன்னை பூபதி ! - தர்மலிங்கம் சுரேஸ்

உலக வரலாற்றிலே அடக்கப்படுகின்ற ஒரு இனத்தின் முதல் பெண்மணி அன்னை பூபதி ! - தர்மலிங்கம் சுரேஸ் 


உலக வரலாற்றிலே அடக்கப்படுகின்ற ஒரு இனத்திற்கு எதிராக தியாகம் இருந்து தன்னையே அழித்துக் கொண்ட தியாக தீபம் அன்னை பூபதி உலக வரலாற்றிலே முதல் பெண்மணியாக போற்றப்படுகின்றார் என தமிழ் தேசிய மக்கள்முண்ணணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்

அன்னை பூபதியின்;; 30 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை 19 மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டிருக்கு சமாதியில் தமிழ் தேசிய மக்கள்முண்ணணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
 
 
சிங்கள பேரினவாதத்தினால் எங்களுடைய இனம் தொடர்ச்சியாக அடக்கப்பட்ட காலத்தில் ஒரு அமைதிப்படை என்ற பேர்வையில் இலங்கைக்குள் நுழைந்த இந்தியா தன்னுடைய மறைமுகமான இனழிப்பில் ஈடுபட்டிருந்தது.
 
இந்த காலப்பகுதில் அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளில் இளைஞர்களும் தமிழ் மக்களும் குறிவைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி எங்களுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் கண்டம் துண்;டமாக வெட்டி குவித்து மிக மோசமான படுகொலையை செய்து இனத்தை மிக கொடூரமாக அழித்துக் கொண்டிருந்தனர்.
 
இவ்வாறான நிலையில் அன்னை பூபதியம்மா 1988 ஆண்டு மாச் 19 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்தையில் ஈடுபடவேண்;டும் இந்திப்படை வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்து
 
மட்டக்களப்பு மாமாங்கத்திலே அன்னை பூபதியம்மா ஏனைய அன்னையர்களுடன் இணைந்து காந்திய தேசத்திலே காந்தி கடைப்பிடித்த அத்தனை அகிம்சை போராட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருந்தார் அதேபோன்று எமது இனத்துக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக காந்தியின் அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டத்திலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
 
இவ்வாறு தொடர்சியாக உண்ணாவிரதத்தில் இருந்த போது அதனை குழப்பும் விதமாக இந்திய அமைதிப்படை என்ற அந்த காட்டுமிராண்டி படைகள் அதனை சிதறடிக்க வைக்கவேண்டும் என்பதற்காக பலவிதமான இன்னல்களை கொடுத்தனர் இருந்தபோதும் அதற்கு ஈடுகொடுத்து இறுதிவரை தொடர்சியாக 1 மாதகாலம் உண்ணாவிரதம் இருந்து ஏப்பில் 19 ம் திகதி தன்னையே அழித்துக் கொண்டார்.
 
இவ்வாறான தியாக தீபத்தின் உடலைக் கூட சுதந்திரமாக அடக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது இன்று 30 வருடம் முடிவற்றாலும் அவருடைய இலட்சியம் வீணாக போகாது அவர் என்ன இலட்சியத்துக்காக உயிர்தியாகம் செய்தாரே அவ்வாறு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவோம்