• :
  • :
களத்தில்

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் வவுனியா பாவற்குளம் மக்கள்!

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் வவுனியா பாவற்குளம் மக்கள்!

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் வவுனியா பாவற்குளம் மக்கள்!

 
வட தமிழீழம், வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் படிவம் 01 கிராம மக்கள் கடந்த 7 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
 
7 வருடங்களுக்கு முன் செட்டிகுளம் பிரதே ச செயலகத்தினால் பாவற்குளம் படிவம் 01 கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் குடியே ற்றப்பட்டனர். ஆயினும் இந்த 20 குடும்பங் களுக்கும் இன்றளவும் வீட்டு திட்டம், மின் சாரம், குடிநீர், மலசல கூடம் மற்றும் வீதிக ள் என எந்த அடிப்படை வசதிகளும் வழங் கப்படாத நிலையில் வறுமையோடு மக்கள் இன்னல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
 
இது குறித்து ஆராய்வதற்காக மாகாணச பை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் தலமை யில் செட்டிக்குளம் பிரேதேசசபை உறுப்பினர்களான சுப்பையா ஜெகதீஸ்வரன்,சுஜீவன் ,வவுனியா தமிழ்பிரதேசசபை உறுப்பினர் குகதாசன் ,கிராம அபிவிருத்தி சங்கதலைவர் அலெக்ஸ் ,சமூக ஆர்வலர் காந்தன் மற்றும் மண்வாசம் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் சென்றுபார்வையிட்டனர்
 
இதன்போது அவர்களது அடிப்படை தேவையான உள்ளக வீதி மற்றும் குடிநீர்வசதிகள் ஆகியவற்றை செட்டிக்குளம் பிரதேசசபையின் ஊடாக உடனடியாக செயற்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .ஏனைய விடயம் எதிர்வரும் செட்டிக்குளம்பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இதன் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாணசபை உறுப்பினர் ஜீ .ரி .லிங்கநாதன் கூறியுள்ளார்.