• :
  • :
களத்தில்

நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தினம் !

நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தினம் !

நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தினம் !

வெசாக் கொண்டாட்டத்திற்காக, மேநாளை, மே 8 இற்கு ஒத்திவைத்த நிலையில், அதனை மறுதலித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்விற்கு   வட தமிழீழம், யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட தமிழர்கள்.
 
இதன் ஆரம்ப நிகழ்வாக தொழிலாளர்தின ஊர்திப் பேரணி மற்றும் பொது மக்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் பேரணியும் பருத்தித்துறை வீதியிலுள்ள சட்டநாதர் கோவிலடியிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக கிட்டு பூங்காவை சென்றடைந்தது பொதுக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
 
இனவழிப்புக்கு ஐநா பாதுகாப்புச் சபையூடாக விசாரணையை வலியுறுத்தியும், தமிழ் தேசமும், இறைமையும் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் அரசியல் விடுதலையை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதல், இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இவ் தொழிலாளர் தின நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் திரண்ள்ளனர்.