• :
  • :
களத்தில்

இயக்குனர் வ.கௌதமன் உட்பட அனைவரும் இன்று மாலை 7 மணியளவில் புழல் சிறையிலிருந்து விடுதலை.

இயக்குனர் வ.கௌதமன் உட்பட அனைவரும் இன்று மாலை 7 மணியளவில் புழல் சிறையிலிருந்து விடுதலை.

இயக்குனர் வ.கௌதமன் உட்பட அனைவரும் இன்று மாலை 7 மணியளவில் புழல் சிறையிலிருந்து விடுதலை.

 


புழல் மத்திய சிறையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி  5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டம்!


இயக்குனர் வ.கௌதமன் , மாவோயிஸ்ட் தோழர்கள், தமிழர் உரிமைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் பாதை தோழர்கள் தூத்துக்குடி நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த அமைதி பேரணியில் இந்திய மற்றும் தமிழக அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலைகளையும் வன்முறையையும் கண்டித்து 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை புழல் மத்திய சிறையில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) நாளை (25/05/2018) காலையிலிருந்து
துவங்கிவுள்ளனர்.
 
கோரிக்கைகள்:
 
1) தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள அதிரடி படையினரை உடனே வெளியேற்று.
 
2) உயிர்கொல்லி நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக இழுத்து மூடு.
 
3) அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்களை சுட்டுக் கொன்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறையிலடை.
 
4) திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு 2கோடி உடனே வழங்கு.
 
5) ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ்
அமைக்கப்பட்டுள்ள
விசாரணை ஆணையத்தை இரத்து செய். அதற்கு பதிலாக பணியிலுள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உடனே விசாரனையினை தொடங்கு….