img/728x90.jpg
தமிழின உணர்வாளர் இயக்குநர் வ கௌதமனை கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!

தமிழின உணர்வாளர் இயக்குநர் வ கௌதமனை கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!

தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமனை கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!

தமிழின உணர்வாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் வ. கௌதமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்களை தொடர்ந்து, அடக்குமுறையை பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல்துறை எந்தவித காரணமின்றி, சென்னை – சூளைமேடு இல்லத்தில் இயக்குநர் வ. கௌதமனை திருவல்லிக்கேணி  பகுதி காவல்துறையினர்  கைது செய்தனர். வ. கௌதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
ஏப்ரல் 10ம்  திகதி  சென்னை சேப்பாக்கத்தில்  நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக இயக்குநர் வ. கௌதமன் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை குறித்து பேசிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். அதேபோல் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மற்றும் மாணவி வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.