• :
  • :
களத்தில்

மக்கள் இயக்குநர் வ. கௌதமன் அவர்களின் கைதை தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது!

மக்கள் இயக்குநர் வ. கௌதமன் அவர்களின் கைதை தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது!

மக்கள் இயக்குநர் வ. கௌதமன் அவர்களின் கைதை தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது!

 
தமிழர் நலனில் மீது அக்கறை கொண்ட ஒரு சிலரில் சமரசம் இல்லாத போராளி அண்ணன் கௌதமன் அவர்கள். தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் பல வருடங்களாக அண்ணன் கௌதமன் அவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம்.பணம், பதவி போன்ற எண்ணற்ற விஷயங்கள் அவரை தேடி வந்தபோதும் அவற்றை புறந்தள்ளிய நேர்மையான மக்கள் போராளி.
 
அவர் தமிழர் நலன் மட்டும் இல்லாமல் உலகில் எங்கு மனித குலம் நசுக்கப்பட்டாலும் அதனை எதிர்க்கும் முதல் குரலாக அண்ணன் கௌதமன் குரல் இருக்கும். அவருடன் இணைந்து செயல்பட்டோம் என்று நினைக்கும்போது எங்களை போன்ற இளையோருக்கு பெருமையாக உள்ளது.
 
அண்ணன் கௌதமன் அவர்கள் சுயநலம் சார்ந்து இருந்தால் அவர் சினிமா துறையிலே பணம் சம்பாதித்து பெரிய இடத்திற்கு வந்திருப்பார். அவருடன் பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். கையில் துளி அளவும் பணம் இல்லாமல் அவர் தவித்த தருணங்கள் ஏராளம். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இனத்தின் விடுதலைக்கு பயணிக்கும் உங்களின் செயல்பாடுகளை கண்டு கண் கலங்கி நிற்கிறோம். ரஜினி, கமல் பின்னாடி சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் நாங்கள் உங்கள் பின்னாடி சுற்றுவதை நினைக்கும்போது தமிழன் என்ற கர்வம் எங்களுக்கு வருகிறது.
 
பொய் வழக்கு போட்டு தமிழக அரசு உங்களை கைது செய்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் உங்களை கண்டு பயம் கொள்கிறது. எந்த அதிகாரத்தை வைத்து கொண்டு இந்த அரசு நம்மை அடக்குமுறை செய்கிறதோ, அந்த அதிகாரத்திற்கு நீங்கள் வர வேண்டும்.
 
அண்ணல் அம்பேத்கர் சொல்வதைப் போன்று அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் எல்லாம் எளிமையானது. உங்களைப் போன்ற நல்லவர்கள் ஒதுங்கி கொள்வதால் கயவர்கள் அதிகாரத்திற்கு வந்து மக்களை அடிமைப்படுத்துகிறார்கள். எனவே சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிகாரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுக்க தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
 
எந்த தவறும் செய்யாத மக்களுக்காக போராடிய இயக்குநர் கௌதமன் அவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இயக்குநர் கௌதமன் அவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.
 
இவண்:
டாக்டர் லயோலா மணி.
மாநில ஒருங்கிணைப்பாளர்.
தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு.