• :
  • :
களத்தில்

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறைத் தண்டனை

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறைத் தண்டனை

 கடலூர் அருகே மனவளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 
கடலூர் மாவட்டம் பெரியாண்டிக்குழியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ரமேஷ் (40). இவர் கடந்த 07.11.14-ம்  தேதி அதே ஊரைச் சேர்ந்த 13 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமியை அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பரங்கிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் ரமேஷை கைது செய்தனர்.  இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றவாளி  ரமேஷூக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 25 ஆயிரம் விதித்தும், அபராத தொகை ரூ 25 ஆயிரத்தை  கட்டத்தவறினால்  மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனை என்றும் தீர்ப்பளித்தார்.  இதையடுத்து போலீஸார் ரமேஷை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.