• :
  • :
களத்தில்

தமிழ்நாட்டிற்கும் சிறப்புத் தகுதி அளிக்கப்படவேண்டும்! - பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டிற்கும் சிறப்புத் தகுதி அளிக்கப்படவேண்டும்! - பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டிற்கும் சிறப்புத் தகுதி அளிக்கப்படவேண்டும்! - பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…

 
தெலுங்கானா  மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. வின் சார்பில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினா் கனிமொழி ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து வியப்படைந்தேன்.
 
இந்த தகுதி ஆந்திராவிற்கு அளிக்கப்பட்டால் அங்கு தொழில் தொடங்க முன் வருபவா்களுக்கு  சிறப்புச் சலுகைகளை ஆந்திர அரசு வழங்கமுடியும். எனவே அண்டை மாநிலமான தமிழ்நாடு பெரும் பாதி்ப்புக்குள்ளாகும். தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்க முன் வருபவா்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும்.
 
ஏற்கெனவே இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பின்தங்கியவை என்ற காரணத்தினால் இந்தச் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்களை அமைத்துள்ளார்கள்.
 
தமிழ்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் உள்ள அம்மாநிலத்திலேயே தங்கள் தொழில்களை கொண்டுசெல்ல முற்படுபவர்கள் அருகில் உள்ள ஆந்திராவில் அந்தச் சலுகைகள் அளிக்கப்படும்போது அங்கு சென்று தொழில்களைத் தொடங்க முற்படுவார்கள்.
 
எனவே ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியும், சலுகையும் அளிக்கப்படுமானால் அது தமிழ்நாட்டிற்கும் அளிக்கப்படவேண்டும் என  வலியுறுத்துகிறேன்.
 
 அன்புடன்
 
பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய முன்னணி