• :
  • :
களத்தில்

ஓ எஸ் மணியனின் ஆதரவாளர் படுகொலை காரில் ஏறியபோது நடந்த துயரம்

ஓ எஸ் மணியனின் ஆதரவாளர் படுகொலை  காரில் ஏறியபோது நடந்த துயரம்

 கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளர் பாபு, கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், கொள்ளிடம்  ஒன்றிய அ.தி.மு.க மாணவரணியின் துணைச் செயலாளராக இருந்தார். முதல்நிலை ஒப்பந்தக்காரராக இருந்த இவர், மணல் குவாரிகளை அமைத்து கோடீஸ்வரராக மாறினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சந்திரமோகனிடம் உதவியாளராக இருந்து வந்தார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், வேலுமணி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அதேநேரத்தில், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் வள்ளலாகவும் திகழ்ந்தார்.

இந்நிலையில், இன்று காலை சீர்காழி வடக்கு பிடாரி வீதியில் உள்ள ஜாஹீர்உசேன் பேருந்து உரிமையாளர் வீட்டுக்குச் சென்று பேசிவிட்டு காரில் ஏற வரும்போது, அடையாளம் தெரியாத கூலிப்படையினரால் பாபு வெட்டிக் கொல்லப்பட்டார்.  இரண்டு பைக் மற்றும் காரில் கூலிப்படையினர் வந்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.