img/728x90.jpg
லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!

லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!

 லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

 
சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயங்கி வருகிறது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி  வருகின்றனர். இங்கு பணியாற்றும் வீரர்களுக்கு பிரத்யேகமாக போர் உடைகளை மாதூர் என்ற  தனியார் நிறுவனத்திடமிருந்து ரிசர்வ் போலீஸ் நிர்வாகம் வாங்கி வந்தது. மதூர் என்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்ததற்கு வழங்க வேண்டிய பணத்தை சிஆர்பிஎப் நிர்வாகம் வழங்காமல் காலம் கடத்தி வந்தது. இதற்காக பணத்தை விரைவில் தரவேண்டும் என்றால் அப்போதைய டிஐஜி நாகராஜன் தனக்கும் தன்னுடன் உள்ள மற்ற சில அதிகாரிகளுக்கும்  லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாகவும், இதற்காக உதவி எஸ்.ஐ ஜான்சன் தேவகுமார் ஆகியோருக்கு மதூர் என்டர்பிரைஸ் நிறுவன இயக்குனர் விஜய் கண்ணா  லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டது. 
 
 
இதுதொடர்பான வழக்கில், போலீஸ் அதிகாரிகளுக்கு  எதிராக  சி.பி.ஐ 2012 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது  கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன் மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பளித்தார். இந்த விவகாரம் மத்திய ரிசர்வ் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.