img/728x90.jpg
சிலை திருட்டை அடுத்து இ பூஜா ஊழல்!   500 கோடி ஊழலில் அதிரும் அறநிலையத்துறை

சிலை திருட்டை அடுத்து இ பூஜா ஊழல்! 500 கோடி ஊழலில் அதிரும் அறநிலையத்துறை

 சிலை திருட்டுக்கு அடுத்தபடியாக அறநிலையத்துறை அதிகாரிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று. `இ-பூஜா, இ-புக்கிங் திட்டத்தின் மூலம் 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது தமிழக அரசு' என்கின்றனர் பக்த கோடிகள். 

 
தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பராமரிப்பது, நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் 36,500 கோவில்களும் 56 திருமடங்களும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள புராதனப் பெருமை வாய்ந்த கோயில்கள், குல தெய்வக் கோயில்கள் போன்றவற்றுக்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகம். இதுதவிர, புராதனச் சின்னங்களைத் தரிசிக்கவும் வெளிநாட்டவர் வருகை தருகின்றனர். இதன்மூலம் வரக்கூடிய வருமானத்தை ஒருங்கிணைக்க நினைத்த அதிகாரிகள், புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினர்.
 
இதுகுறித்துப் பேட்டியளித்த அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, `அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், நிர்வாகம், நிலம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இணையதளமயமாகிவிட்டது. கோயில் பூஜைக்கு இ-பூஜா திட்டமும் தங்குமிடம், மண்டபம், அன்னதானம் ஆகியவற்றைப் பெறுவதற்கு இ-புக்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இணை ஆணையர், துணை ஆணையர் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை உதவி ஆணையர், செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் எங்கு இருந்தாலும் அறநிலையத்துறை இணையதளம் மூலம் பணம் செலுத்தும் வசதியைப் பெறலாம்' என நெகிழ்ந்தார். 
 
``இ-பூஜா, இ-புக்கிங் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு, தாராபுரத்தைச் சேர்ந்த ஐ ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தின்வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கோயிலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை ஒரேயடியாகக் கொள்ளையடிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டதுதான் கொடுமை" என விவரித்த அறநிலையத்துறை அதிகாரியிடம், 
 
``அமெரிக்காவில் இருக்கும் பக்தர் ஒருவர், இ பூஜா திட்டத்தின் மூலம் 10,000 ரூபாயைச் செலுத்தினால், அந்தப் பணம் ஐ ஸ்கை நிறுவனத்தின் கணக்குக்குச் சென்றுவிடும். இந்த நிறுவனம் நினைத்தால்தான், கோயில் கணக்குகளுக்குப் பணம் செல்லும். இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அனைத்து கோயில்களின் ஜே.சி, டி.சி, ஏ.சி, இ.ஓ ஆகியோரின் மெயில் பரிவர்த்தனைகளையும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இ-பூஜா, இ-புக்கிங் திட்டத்தில் வசூலான எந்தப் பணமும் கோயிலின் கணக்குகளுக்குச் செல்லவில்லை. அந்த வகையில் பழனி கோயிலில் மட்டும் 25 கோடி ரூபாய் வரையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க 500 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடந்துள்ளது"  என்றவர், 
 
வாழ்வே...மாயம்...அறநிலைத்துறையில்...என்ன ...நடக்கிறது...என்பதை...நம்மைப்படைத்த...ஆண்டவன்...மட்டும்...அறிவான்...கலி...காலத்தில்...இவ்வாறான...அக்ரமங்களும்...அநியாயங்களும்...நடப்பது...என்...
 
``பழனி கோயிலில் நெட்வொர்க் வேலை செய்யவில்லையென்றாலும்கூட இந்த நிறுவனத்தைத்தான் அழைக்க வேண்டும். அந்தளவுக்கு ஒட்டுமொத்த அறநிலையத்துறைக் கட்டுப்பாடும் ஐ ஸ்கை நிறுவனத்தின் கைகளில் இருந்தன. இதன் பின்னணியில் உயர் அதிகாரிகள் சிலரும் இருந்துள்ளனர். `இ-பூஜாவில் போடப்பட்ட பணம் எங்கே போனது' என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் சொல்ல மறுக்கின்றனர். சிலை திருட்டைப் போலவே, இந்த நிறுவனம் சுருட்டிய பணத்துக்கும் எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ந்துபோன கோயில் செயல் அலுவலர்கள், தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். இதனால் பயந்துபோன சில அதிகாரிகள், அந்தக் கம்பெனியிடம் கணக்குகளைக் கேட்டுள்ளனர். இதை எதிர்பாராத அந்த நிறுவனத்தினர், இந்து அறநிலையத்துறையின் சர்வர்களை பிடுங்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் முடங்கிவிட்டது. கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, இந்த நிறுவனத்தின் ஆதிக்கத்தில்தான் அறநிலையத்துறை செயல்பட்டு வந்தது. கடந்த ஓரிரு ஆண்டுகளில்தான் மொத்த குளறுபடியும் நடந்துள்ளது" என்றார் விரிவாக. 
 
இ-பூஜா மோசடி குறித்து ஐ ஸ்கை நிறுவனத்திடம் விளக்கம் அறிவதற்காக, இணையதளத்தில் அவர்கள் கொடுத்துள்ள எண்களைத் தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் வரவில்லை. எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். `ஐ ஸ்கை மென்பொருள் நிறுவனத்திடமிருந்து, கடந்த மூன்று மாதங்களாக எந்த மெயிலும் எங்களுக்கு வரவில்லை என்பது உண்மைதான். கோயில்களுக்கும் அவர்கள் பணம் அனுப்பவில்லை. இதையடுத்து, `ஏன் பணம் அனுப்பவில்லை, மெயில் அனுப்புவதில் ஏன் தாமதம்?' எனக் கோயில் நிர்வாகிகள் கேட்டுள்ளனர். அதன் பிறகு சில நாள்கள் மெயில் அனுப்பியுள்ளனர். ஆனால், பரிவர்த்தனை தொடர்பான எந்தத் தகவலையும் அந்த நிறுவனம் அளிக்கவில்லை. அந்த மென்பொருள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. இப்போது இ-பூஜா திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த நிறுவனத்தால் சர்வர் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான்"  என்றதோடு முடித்துக் கொண்டார்.