• :
  • :
களத்தில்

திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு 30ல் நிறைவு

திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு 30ல் நிறைவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரது நிலத்தில் முதல் கட்டமாக, 20 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் உறைகிணறுகள், களிமண் அச்சுகள், தங்க அணிகலன்கள் கண்டறியப் பட்டன. இதையடுத்து, கணேசன் என்பவரது நிலத்தில், 13 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் காலம் அறிய ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணியை வரும், 30ம் தேதிக்குள் முடிக்க தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.