img/728x90.jpg
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக செயல் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா?

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக செயல் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா?

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசு மத்திய அரசிடம் செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு முடிவெடுத் தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மேகேதாட்டு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதாவது, ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட காவிரி நீர்ப்பாசனக் கழக அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தினர்.

அதன் முடிவில், அப்போதைய முதல்வர் சித்தராமையா, ‘‘மேகேதாட்டு திட்டம் ரூ.5912 கோடி மதிப்பில் விரைவில் செயல்படுத்தப்படும். 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படும்''என அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ''காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா புதிய அணைகள் கட்டக்கூடாது. இந்த தீர்ப்பின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீர்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும்'' என உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, மேகேதாட்டுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கர்நாடக அரசு சார்பில் கடந்த வாரம் செயல்திட்ட அறிக்கை மற்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் திட்டம்

இதனிடையே, மேகேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்காதபட்சத்தில் கர்நாடக அரசு அங்கு நிலம் கையகப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. இதற்காக, கனகபுரா வட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கர் வன நிலம் மற்றும் தனியார் நிலத்தை கையகப்படுத்த முடிவெடுத்திருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள் ளார். நில கையகப்படுத்துவது குறித்து விரைவில் விவசாயி களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடவும் கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா தாக்கல் செய்துள்ள மேகேதாட்டு திட்டத்தின் செயல் திட்ட அறிக்கை குறித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்க மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதேபோல், மத்திய அரசின் வனத்துறை, சுற்றுலா துறை, மின் ஆணையம் உள்ளிட்ட பிற துறைகளின் கருத்தையும் கேட்க திட்டமிட்டுள்ளது.

தமிழகம் எதிர்ப்பு

மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதில் தீவிரமாகியுள்ள கர் நாடக அரசுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகா வின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல் பட கூடாது என தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன