• :
  • :
களத்தில்

முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் சோதனை நிறைவு

முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் சோதனை நிறைவு

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னையில் 2வது நாளாக இன்றும் (செப்.,06) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடந்தினர்.

குட்கா ஊழல் தொடர்பாக குட்கா வியாபாரி மாதவராவின் குடோனுக்கு கடந்த வாரம் சீல் வைத்த சிபிஐ அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம், அவரது டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களின் அடிப்படையில் நேற்று காலை முதல் தமிழகம், புதுச்சேரியில் 35 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் நேற்றே சோதனை நிறைவடைந்த நிலையில், சென்னை நொளம்பூரில் உள்ள முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த சோதனை காலை 8.15 மணியளவில் நிறைவடைந்தது. இந்த சோதனையில் ஜார்ஜ் வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.