• :
  • :
களத்தில்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.

சேலம், நாமக்கல் மாவட்டங் களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, நேற்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

 

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். அவர்கள் தான் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர். இன் றைக்கு தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினை களை சந்தித்துக் கொண்டிருக் கிறோம். தேவையான நிதி ஆதா ரத்தை பெருக்குவதுதான் மாநில அரசின் நிலை. அப்படி நிதியை பெருக்கினால்தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும்.

விஜயபாஸ்கர் குற்றவாளியா?

குற்றச்சாட்டு சொல்லப்பட்ட தாலேயே விஜயபாஸ்கர் குற்ற வாளி ஆகிவிட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்ற வாளியாக கருதமுடியும். இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதை பல்வேறு வழிகளில் தடை செய்ய முற்பட்டார்கள். அவர்களால் முடிய வில்லை. அதனால் இதுபோன்ற வழியை பின்பற்றி குற்றச்சாட்டு களை சுமத்திவருகின்றனர்.

கடந்த கால திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. அவையெல்லாம் இனி வெளியே வரும்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக பணம் வழங்கி வருவ தாக கூறப்படுவது தவறான செய்தி. தமிழகத்தில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியும், நிதியும் தேவை. ஆகவே, யார் எங்களுக்கு நிதி உதவி செய்கிறார்களோ அவர் களுக்கு அதிமுக அரசு நிச்சயம் துணை நிற்கும். மத்திய அரசோடு இணக்கமான உறவு இருந்தால், தமிழகத்துக்கு தேவையான திட் டங்களை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.