• :
  • :
களத்தில்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மழை?

நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மழை?

நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், மழை முடிவுக்கு வரும் நிலையில், தற்போது, மேற்கு திசை காற்று வலுப்பெற்றுள்ளது. அதனால், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுவையின் கடலோர பகுதிகளிலும், பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. கடலில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்யும். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. போளூர், சின்னக்கல்லார், 5; வேடசந்துார், 4; பாளையங்கோட்டை, 3; ஆர்.கே.பேட்டை, நடுவட்டம், சோளிங்கர், 2; சிவகங்கை, வால்பாறை, சிட்டாம்பட்டி, தோகைமலை, ஊட்டி, போச்சம்பள்ளி, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை, 6:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, திருச்சியில், 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை மற்றும் சேலம், 38; பாளையங்கோட்டை, தொண்டி; 37; வேலுார், திருத்தணி, நாமக்கல், மதுரை, தர்மபுரி, கோவை, 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.