img/728x90.jpg
img/728x90.jpg
ஸ்டாலினுக்கு தமிழிசை சவால்

ஸ்டாலினுக்கு தமிழிசை சவால்

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்ற திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் கட்சியின் சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘4ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப்பட்டியல் இதோ!

தீராத மின்வெட்டு ,காவிரி ,மீனவர் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் ,காங்கிரசின் ஊழல்ப ங்காளிகள் எய்ம்ஸ்? ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார்.

10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள். எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா’’ என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.