img/728x90.jpg
img/728x90.jpg
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் மிகவும் சிக்கலானது

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் மிகவும் சிக்கலானது



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் மிகவும் சிக்கலானது என்றும் தமிழக அரசின் பரிந் துரையை உன்னிப்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில் பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம், 26 பேரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டு விட்டதாக அறிவித்து அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. மேலும் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந் திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மீதமுள்ள 19 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, மனிதாபிமான அடிப் படையில் நளினியின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். 2014-ம் ஆண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து அப்போ தைய தமிழக முதல்வர் ஜெயல லிதா தலைமையிலான அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத் தது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் படி, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். ஆனால், மத்திய அரசு இதற்கு உரிய பதிலை அளிக்கவில்லை. இதை யடுத்து தமிழக அரசு மறுஆய்வு மனுதாக்கல் செய்தது. இதை யடுத்து தமிழக அரசின் கடிதத்துக்கு 3 மாதங்களுக்குள் உரிய பதில் அளிக்குமாறு கடந்த ஜனவரி 23-ம் தேதி மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து 7 பேரின் விவரங்களையும் பெற்றுக் கொண்ட மத்திய அரசு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக அரசின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவரும் நிராகரித் தார். இதையடுத்து தமிழக அரசின் வழக்கின் மீதான விசாரணையின் போது மத்திய அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கா அல்லது மாநில அரசுக்கா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, '7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம். ஆளுநர் அந்த பரிந்துரையின் மீது முடிவெடுக்கலாம்' என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, சட்ட நிபுணர்கள், அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசித் தார். கடந்த செப்.9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி விவாதித்தது. அப்போது, பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அந்த தீர்மானம் அன்றே ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால், அமைச்சரவையின் பரிந் துரைகள் குறித்து ஆளுநர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அமைச் சரவையின் பரிந்துரையை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக செப்.13-ம் தேதி தகவல்கள் வெளியாகின. ஆளுநரே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது ஏன் என பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, ‘‘ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது’’ என்று தெரிவித்திருந்தார். இருப் பினும், ஆளுநர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தன.

பரிந்துரை செய்யவில்லை

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் விடுதலை

விவ காரம் தொடர்பாக, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு பரிந் துரைத்திருப்பதாக சில ஊடகங் களில் செய்திகள் வெளியாகி உள்ளன. சில தொலைக்காட்சிகள், இது தொடர்பான விவாதங்களை யும் தங்கள் யூகத்தின் அடிப் படையில் நடத்தின. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பரிந்துரையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

இந்த வழக்கானது மிகவும் சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முழுமையான அதிக அளவிலான ஆவணங்களை செப்.14-ம் தேதிதான் ஆளுநர் மாளிகையில் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. இந்த ஆவணங் களை மிகவும் உன்னிப்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற் கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். தேவைப்படும் பட்சத்தில் நிச்சயமாக போதுமான ஆலோசனைகள் பெறப்படும். அரசியலமைப்பின் அடிப்படையில் நியாயமான முடிவு நிச்சயம் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐயம் தேவையில்லை

இதற்கிடையில், நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசிய லமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி, மாநில அரசின் நிர்வாக தலைவரான ஆளுநர், சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதா, அமைச்
சரவை முடிவு மீது இசைவை தந்தே ஆக வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் இது தெளிவாக உள்ள நிலையில், ஐயம் கொள்ள வேண் டியதில்லை. எனவே, தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப் பளித்து ஆளுநர் நல்ல முடிவை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.