• :
  • :
களத்தில்

இதே நாளில் அன்று சரோஜினி வரதப்பன்

இதே நாளில் அன்று சரோஜினி வரதப்பன்

சரோஜினி வரதப்பன்: தமிழக முன்னாள் முதல்வர், பக்தவத்சலம் - ஞானசுந்தராம்பாள் தம்பதிக்கு மகளாக, 1921 செப்.,21ல் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசில் இருந்தார். சிறிய வயதிலேயே, தன் உறவினரான, வரதப்பன் என்பவரை மணந்தார்.மைசூர் பல்கலையில், அரசறிவியல் துறையில், முதுகலை பட்டமும்; சென்னை பல்கலையில், வைஷ்ணவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தன், 80-வது வயதிலும், 'சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்' என்ற தலைப்பில், முனைவர் பட்டத்திற்கான, முன்மொழிவை வைத்தவர்.இவரின் சமூக சேவையை பாராட்டி, 1973ல், பத்ம ஸ்ரீ விருதும்; 2004ல், ஜானகிதேவி பஜாஜ் விருதும்; 2009ல், பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டன. 2013-, அக்.,17-ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.