img/728x90.jpg
தயாரானது யு.பி.எஸ்.சி

தயாரானது யு.பி.எஸ்.சி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட, 24 வகை தேர்வுகளுக்கான தேதியை, மத்திய குடிமை பணிகள் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,அறிவித்துள்ளது.இந்திய நிர்வாக பணிகள், வெளிநாட்டு பணிகள், போலீஸ் மற்றும் இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.மத்திய அரசின் உயர் அந்தஸ்து பெற்ற, 24 பதவிகளுக்கு, ஒரே தேர்வாக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டிலும் நடத்தப்படும் தேர்வு கால அட்டவணையை, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதன்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதி தேர்வு மற்றும் இந்திய வனத்துறை பணிகள் தேர்வு, ஜூன், 2ல் நடத்தப்படும். இதற்கானஅறிவிக்கை, பிப்., 19ல் வெளியிடப்படும்.சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, செப்., 20ல் நடக்கும். இந்திய வனத்துறை பணிகளுக்கான முதன்மை தேர்வு, டிச., 1ல் நடத்தப்படுகிறது.மத்திய ஆயுத போலீஸ் படை பணிகளுக்கு, ஆக., 18ல் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விபரங்களை, www.upsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்