• :
  • :
களத்தில்

8.5 லட்சம் செட் - டாப் பாக்ஸ் ஒரு மாதத்திற்குள் தர திட்டம்

8.5 லட்சம் செட் - டாப் பாக்ஸ் ஒரு மாதத்திற்குள் தர திட்டம்

 வாடிக்கையாளர் களுக்கு, ஒரு மாதத்திற்குள், 8.5 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'களை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:அரசு கேபிள், 'டிவி'க்கு, 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கேபிள், 'டிவி' டிஜிட்டல் சேவைக்கு மாறிய பின், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, செட் - டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 27.5 லட்சம் செட் - டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 8.5 லட்சம் செட் - டாப் பாக்ஸ்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.இவற்றை ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் வினியோகிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்