• :
  • :
களத்தில்

ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குழு

ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குழு

ரேஷன் ஊழியர்கள், ஊதிய உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில், தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பெரும்பாலான ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 6ல், வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர்.பின், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய அதிகாரிகள், தனி குழு அமைத்து, ஊதிய உயர்வு தொடர்பாக முடிவு எடுப்பதாக அறிவித்தனர். ஆனால், குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ஊழியர்கள், முதல்வர் பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டனர்.இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பான முடிவுகளை எடுக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில், தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழுவின் பணி தொடர்பான விபரங்களை, அரசிடம் இருந்து பெற்றதும், எத்தனை நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்ற விபரம் அறிவிக்கப்படும்