img/728x90.jpg
img/728x90.jpg
புதுச்சேரி கப்டன்  மில்லர் அரங்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்!

புதுச்சேரி கப்டன் மில்லர் அரங்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்!

தமிழீழத்தை மீட்கப் போராடி உயிர்நீத்த எம்   மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கப்டன் மில்லர் அரங்கில் நேற்று  மாலை 6.05 மணிக்கு நடத்தப்பட்டது.

முன்னதாக அரியாங்குப்பத்திலுள்ள தந்தை பெரியார் சிலையருகே இருந்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர்  கொளத்தூர் மணி   அவர்கள் தீபச்சுடர் ஏந்தி ஊர்வலமாக வர, அவரைப் பின்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பெண்கள், குழந்தைகள் எனப் பொதுமக்களும் பெருந்திரளாக ”கப்டன் மில்லர் அரங்கம்” வந்தடைந்தனர்.

அரங்கில் தீபச் சுடர் ஏற்றப்பட்டபொழுது மாவீரர் வீரவணக்கப் பாடல் இசைக்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் அவர்களின் வீரவணக்க அறிமுக உரையைத் தொடர்ந்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர்  கொளத்தூர் மணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார்.