img/728x90.jpg
கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!

கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!

 கொங்கு மண்டலத்தை பலப்படுத்தி, கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில், ஸ்டாலின் இறங்குகிறார்.

 
கோட்டையை, பிடிக்க, புதிய, திட்டம்!
 
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ளன.இந்த மண்டலத்தில், 57 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 53 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணிக்கு, நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
 
 
இதேபோல, 2016 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 45 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி, 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11ல், 
10 தொகுதிகளை, அ.தி.மு.க., அள்ளியது. கோவையில் உள்ள, 10 தொகுதிகளில் 
 
ஒன்பதை கைப்பற்றியது. ஈரோட்டில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், இரண்டு சட்டசபை தேர்தல் களிலும், அ.தி.மு.க.,வே வெற்றி வாகை சூடியது.
 
 
ஆரம்ப காலங்களில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க., செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. 
ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்தது. அந்த சரிவில் இருந்து, மீண்டு வர முடியாத நிலையில், தி.மு.க., உள்ளது.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் அதிக வெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டதால், ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு, தி.மு.க., தள்ளப்பட்டது. 
 
 
எனவே, கொங்கு மண்டலத்தில், கட்சியை பலப் படுத்தும் நடவடிக்கையை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துவங்கவுள்ளதாக, தகவல் வெளியாகி யுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப் படுவதாவது:கொங்கு மண்டலத்தில், நகர்ப்புற ஓட்டுகளை விட, கிராமப்புற ஓட்டுகளே அதிகம். எனவே, கிராமப்புற மக்களின் ஆதரவை பெறும் வகையில், ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். முதற்கட்டமாக, இம்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.
 
 
மக்களை சந்திக்கும் போது, அவர்களது பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப உதவிகள் செய்யவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள் ஓட்டுகளை குறி வைத்து, அவர் பயணம் செய்யவுள்ளார். திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன் அல்லது பின், இந்த சுற்றுப்பயணம் அமையும். கொங்கு மண்டலத் தில் கால் பதிப்பதன் வாயிலாக, கோட்டையை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில், இந்த, 'ஆப்பரேஷனை' அவர் அரங்கேற்ற உள்ளார்.
 
 
அதே நேரத்தில், கொங்கு மண்டல உடன் பிறப்புகளிடையே, பெரிய அளவில் கோஷ்டி பூசல் காணப்படுகிறது. அதை களைவதற்கான முயற்சியிலும், ஸ்டாலின் ஈடுபட உள்ளார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படு கிறது.