img/728x90.jpg
இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

 அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1ல், துவங்கியது; அக்., 31 வரை நடக்க உள்ளது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, முதல் சிறப்பு முகாம், செப்., 9ல், தமிழகத்தில் உள்ள, 67 ஆயிரத்து, 644 ஓட்டுச் சாவடிகளில் நடந்தது.அன்றைய தினம், 3.05 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். பெயரை நீக்க, 20 ஆயிரத்து, 423 பேர்; திருத்தம் செய்ய, 34 ஆயிரத்து, 109 பேர்; முகவரி மாற்றம் செய்ய, 23 ஆயிரத்து, 460 பேர் விண்ணப்பித்தனர்.மொத்தம், 3.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது முறையாக, இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர்சிறப்பு முகாம் நடக்க உள்ளது.செப்., 1ல், சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பட்டியலில், பெயர் இல்லாவிட்டால், புதிதாக விண்ணப்பிக்கலாம். அதேபோல, முகவரி மாற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், மூன்று அல்லது நான்கு ஊழியர்கள், இன்று காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பணியில் இருப்பர்.'சிறப்பு முகாமிற்கு செல்ல முடியாதவர்கள்,தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.