img/728x90.jpg
நாங்கள் ஜீரோ  ராகுல் காந்திதான் ஹீரோ  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

நாங்கள் ஜீரோ ராகுல் காந்திதான் ஹீரோ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

 காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ. கட்சியில் ஒற்றுமை அவசியம். பாகுபாடு கூடாது என்று முதல்வர் நாராயணசாமி இளைஞர் காங்கிரஸாரிடம் அறிவுறுத்தினார்.

 
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
 
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வெற்றிபெற்ற புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர்கள், பொது செயலாளர்கள், ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினர்.
 
சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
 
முன்னதாக தேசிய நிர்வாகிகளை புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் வரவேற்பு அளித்து வாகன பேரணியாக தமிழ் பாரம்பரியப்படி அழைத்து வந்தனர்.
 
இவ்விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் கந்தசாமி பெயரை அடிக்கடி விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட போது தொண்டர்கள் நிறுத்தாமல் கரவொலி கோஷம் எழுப்பியதால் விழாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதனால் அமைச்சர்கள் நமச்சிவாயமும் கந்தசாமியும் அமைதியாக இருக்க கூறியும் தொண்டர்கள் கேட்காததால் இரு அமைச்சர்களும் தொண்டர்களை கடிந்து கொண்டனர். துணைத்தலைவர் ஸ்ரீனிவாசும் கடுமையாக பேசினார்.
 
இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 
நன்றாக விசில் அடிக்கிறீர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் சக்தியை காட்டுங்கள். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும்.
 
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி ஏற்படவில்லை என கூறியும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 90 நாளிலேயே கருப்பு பணத்தை ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் ரூ15 லட்சம் பணம் போடப்படும் என மோடி தெரிவித்து பிரதமானார் ஆனால் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் 15 பைசா கூட போடவிலை.
 
கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பாகுபாடு கூடாது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்ல இளைஞர் காங்கிரஸார் பாடுபடவேண்டும். ராகுலை தவிர யாருக்கும் பிரதமராக தகுதியில்லை. காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ.
 
புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு பெரிய சனியன் பிடித்துள்ளதை நீக்க ராகுல் காந்தியை பிரதமராக்கினால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டார்.