img/728x90.jpg
மத்திய அரசின் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசின் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

 தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த 1.57 லட்சம் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
 
“தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில், தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.
 
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் தனியாக அடையாள அட்டை ஏதும் பெற தேவையில்லை. முதல்வரின் விரிவடைந்த காப்பீடுக்கான அடையாள அட்டையே போதும். வெளிமாநிலங்களிலும் தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.” இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.