• :
  • :
களத்தில்

அதிமுக-வின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்

அதிமுக-வின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்

 தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையில் 90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

 
மேலும், அ.தி.மு.க.வில் இருந்து விலகி எங்கள் இயக்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் பொள்ளாட்சியில் பேசியுள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் தாமோதரன் கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
 
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா பொள்ளாச்சி அருகே கோலார் பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் அ.ம.மு.க.வில் இணைந்தனர். விழாவில் தினகரன் பேசியதாவது-
 
தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையில் 90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 
அ.தி.மு.க.வில் இருந்து விலகி எங்கள் இயக்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.