img/728x90.jpg
அதிமுக  அருண்மொழித் தேவன் அளித்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது புதிய வழக்கு

அதிமுக அருண்மொழித் தேவன் அளித்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது புதிய வழக்கு

அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் அளித்த புகாரின்பேரில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி உண்ணா விரதப் போராட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘‘திட்டக்குடி கோயில் நிலத்தை அருண்மொழித்தேவன் எம்பி ஆக்கிரமித்துள்ளார்’’ என பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதனிடம் கடந்த 19-ம் தேதி அருண்மொழித்தேவன் புகார் அளித்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், எச்.ராஜா மீது, இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்குதல், கலவரத்தை தூண்டுதல், பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்புதல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 2 உட்பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.