img/728x90.jpg
700 ஆண்டு பழமையான கோயிலின் ஊஞ்சல் மண்டபம் இடிந்தது

700 ஆண்டு பழமையான கோயிலின் ஊஞ்சல் மண்டபம் இடிந்தது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பா டியை அடுத்த வெங்கடாம்பேட்டை யில் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலின் எதிரே இருந்த ஊஞ்சல் மண்டபத்தை புதுப்பிக்க ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது.சிதம்பரத்தைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் என்பவர் ஒப்பந்த தாரராக நியமிக்கப்பட்டு பணி நடைபெற்றது. பணி முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊஞ்சல் மண்டபம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலை யில் ஊஞ்சல் மண்டபம் நேற்று காலை திடீரென விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் கருணாகரன் கூறும் போது, “புனரமைப்பு பணி என்ப தால், ஏற்கெனவே பயன்படுத்தப் பட்ட தூண்கள் பயன்படுத்தப்பட் டன. பழமையான கோயில் என்ப தால் தூண்களின் உறுதித் தன்மை குறைந்திருக்க வாய்ப்புண்டு. இடிந்து விழுந்ததற்கான கார ணத்தை அறிய பொறியாளர் கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார்