• :
  • :
களத்தில்

ஆளுநருடன் அற்புதம்மாள் சந்திப்பு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரிக்கை

ஆளுநருடன் அற்புதம்மாள் சந்திப்பு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரிக்கை

ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தை சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அமைச் சரவை யின் பரிந்துரையை ஏற்க வேண் டும் என வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண் டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் மாநில அமைச்ச ரவையின் பரிந்துரை யின்படி ஆளுநர் விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித் திருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன் விடு தலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால், இரு வாரங்கள் கடந்த நிலையிலும் அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன் வாரிலால் புரோஹித்தை பேரறி வாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மாநில அமைச்சரவை யின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் அற்புதம் மாள் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு எனது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தேன். எனது மனுவை முழுமையாக படித்துப் பார்த்தார்.

பரோலில் வந்தபோது பேரறி வாளன் எப்படி இருந்தார் என்பதை விளக்கி, விடுதலையான பிறகும் அதுபோலவே நடந்து கொள்வார் என மனுவில் கூறியிருந்தேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸின் கருத்தையும் ஆளுநரிடம் எடுத்துக் கூறினேன்.

அனைத்தையும் பெற்றுக் கொண்ட ஆளுநர், விரைவில் முடிவு எடுப்பதாக உறுதி அளித் தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அமைச்சரவை பரிந்துரை அடிப் படையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.