• :
  • :
களத்தில்

ஜெயலலிதா மயங்கி விழுந்தபோது வீட்டிலிருந்த பணிப்பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும்

ஜெயலலிதா மயங்கி விழுந்தபோது வீட்டிலிருந்த பணிப்பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும்

 ஜெயலலிதா மயங்கி விழுந்த போது வீட்டிலிருந்த 2 பணிப்பெண் களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அலு வலர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். அவரிடம், ஜெய லலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை யளித்த அப்போலோ மருத்துவர் கள் வெங்கட்ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர், அருட்செல்வன் ஆகியோரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
 
அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையின்போது மனோஜ் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
 
பின்னர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டில் இருந்த இரண்டு பணிப் பெண்களிடம் ஏன் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் வலியுறுத்தி இருக்கிறேன்.
 
பலர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. சில போலீஸ் அதிகாரிகள் உண்மையை மறைத்து சாட்சி கூறியுள்ளனர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாரை யும் சசிகலா ஏன் அனுமதிக்க வில்லை? ஆறுமுகசாமி ஆணையத் தின் முடிவு நல்ல முடிவாக இருக்கும்” என்று கூறினார்.