• :
  • :
களத்தில்

பழைய பத்திரங்களை ஸ்கேன் செய்ய ரூ.89 கோடி ஒதுக்கீடு பத்திர பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 கட்டணம்

பழைய பத்திரங்களை ஸ்கேன் செய்ய ரூ.89 கோடி ஒதுக்கீடு பத்திர பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 கட்டணம்

 பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திர பிரதி பெறுவதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்க பதிவுத் துறைக்கு அனுமதியளித்துள்ள தமிழக அரசு, பத்திரங்களை ‘ஸ்கேன்’ செய்ய ரூ.89 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

 
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், கிரைய பத்திரங்கள் தொலைந்துவிட்டாலோ, வங்கி அடமானத்தில் உள்ள நிலையிலோ, வேறு விஷ யங்களுக்காக தேவைப்படும் போது, அந்த பத்திரத்தின் பிரதியை விண்ணப்பித்துப் பெற முடியும். இவ்வாறு வழங்கப்படும் பிரதி பத்திரம் சார்பதிவாளரின் முத்திரையுடன் இருக்கும். இதற்கு பக்கத்துக்கு ரூ.25 கட்டணம்.
 
பதிவுத்துறையைப் பொறுத்த வரை, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி முதல், அன்றாடம் பதிவு செய்யப்படும் பத்திரங்கள், ஒளிவரு டல் (ஸ்கேனிங்) செய்யப்பட்டு, அவை டிஜிட்டல் அடிப்படையில், மத்திய சர்வரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 
இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் அப்போதைய முதல் வர் ஜெயலலிதா, ‘‘ரூ.140 கோடியில் பதிவுத்துறையில் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக் கப்படுவதுடன், மைக்ரோ பிலிமில் பாதுகாக்கப்படும்’’ என்றார்.
 
இதன் அடிப்படையில், தற்பாது ஸ்டார் 2.0 மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டு அதன் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. அதே நேரம், கடந்த 1865-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் இதுவரை ஸ்கேன் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படாமல் உள்ளது.
 
இதையடுத்து, இவற்றை ஸ்கேன் செய்து பாதுகாக்க ரூ.89 கோடியே 17 லட்சம் ஒதுக்கும்படி யும் பத்திர பிரதி வழங்க, பக்கம் ஒன்றுக்கு ரூ.50 வசூலிக்க அனு மதிக்கும்படியும் தமிழக அரசுக்கு பதிவுத்துறைத் தலைவர் கடிதம் அனுப்பினார்.
 
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ரூ.89 கோடியே 17 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து, முதல்கட்டமாக ரூ.35 கோடியே 67 லட்சம் நிதியையும் ஒதுக்கியுள்ளது. இதுதவிர, பத்திரப் பிரதி பெற, பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்கவும் அனுமதியளித்து, அதற்கான விதிமுறைகளையும் வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
 
இதுதொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பத்திரங்களை ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்த பின்னரே, பத்திரப் பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்கும் திட்டம் அமலாகும். பத்திரப் பிரதிகளை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெறலாம்” என்றார்.