img/728x90.jpg
உலக சுற்றுலா தினம் ஊட்டியில் உற்சாகம்

உலக சுற்றுலா தினம் ஊட்டியில் உற்சாகம்

 உலக சுற்றுலா தினத்தையொட்டி, ஊட்டி ரயில் நிலையத்தில், சுற்றுலா பயணியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.உலக சுற்றுலா தினம், ஆண்டுதோறும், செப்., 27ல் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நேற்று சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஊட்டி ரயில் நிலையத்தில், சுற்றுலா பயணியரை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊட்டி மலை ரயிலில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் வந்தனர். அவர்களுக்கு, சுற்றுலா உதவி அலுவலர் துர்கா தேவி, ரயில் நிலைய மேலாளர் பிரமோத், நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன், பூங்கொத்து கொடுத்து வரவேற்று, இனிப்புகள் வழங்கினர்.பள்ளி, கல்லுாரி மாணவியர், வரிசையாக நின்று, சுற்றுலா பயணியரை ஆர்வமுடன் வரவேற்றனர். மலை ரயில் குறித்து வைக்கப்பட்ட அரிய புகைப்படம், தோடர் மக்களின் பாரம்பரியம் குறித்த புகைப்படங்களை பார்த்து, பயணியர் வியந்தனர்.ஹாங்காங் பயணி யுரேகா, கூறியதாவது:மலை ரயில் பயணத்தில், நான் கண்ட இயற்கை காட்சிகள், புது அனுபவமாக உள்ளது. பாரம்பரிய மிக்க மலை ரயிலில் பயணம் மேற்கொண்டது பெருமையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற, 12 பள்ளி மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.