img/728x90.jpg
புழல் சிறையில் 5-வது முறையாக சோதனை பிரியாணி அண்டா உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல்

புழல் சிறையில் 5-வது முறையாக சோதனை பிரியாணி அண்டா உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல்

 சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் உள்ள கைதிக ளில் சிலர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்கள் நவீனசெல்போன், ஆடை, உணவு பதப்படுத்தி வைக்கும் பொருட்கள், வெளி உணவு வகைகளுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 
இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சிறைத்துறை அதிகாரிகள் சிறைக்குள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நவீன செல்போன்கள், டிவிக்கள், ஹோட்டலில் இருந்துவரவழைக்கப்பட்ட உணவு வகை கள் உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சில சிறைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேலும் பல சிறைகளில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். புழல் மத்திய சிறையில் அடுத்தடுத்து இதுவரை 4 முறை நடத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 5-வது முறை யாக சிறைத்துறையின் சென்னை சரக டிஐஜி முருகேசன், கண் காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு முடித்துள்ளனர். இந்த சோதனை நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு தொடங்கி  இரவு 9.45 மணி வரை நீடித்துள்ளது.  அப்போது, சிறையில் இருந்து 29 டிவிக்கள், 18 கட்டில்கள், 27 எப்எம் ரேடியோக்கள், 4 குக்கர்கள், பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய அண்டா மற்றும் சமையலுக்கு பயன்படுத் தப்படும் மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சட்ட விரோதமாக சிறைக்குள் இதுபோன்ற பொருட்களை கொண்டு செல்ல அனுமதிப்பது யார், எப்படி இந்த வகை பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகின்றன என தனிப்படை போலீஸார்விசாரித்து வருகின்றனர். சிறைவளாகத்தில் கைதிகள் அறையில்இருந்து  ஆடம்பர பொருட்கள்தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருவது சிறைத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
 
திடீர் உண்ணாவிரதம்
 
புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட் டுள்ள சிறையில், அவர்களுக்கு முறைகேடாக வசதிகள் செய்து தரப்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அங்கு அடிக்கடி திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கைதிகளின் அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 800 கைதிகள் நேற்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடம் சிறைத்துறை கூடு தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா பேச்சுவார்த்தை நடத்தினார்