• :
  • :
களத்தில்

தடம் மாறும் இளைய தலைமுறை போதை பொருள் விற்பனை றெக்க கட்டி பறக்குது!

தடம் மாறும் இளைய தலைமுறை போதை பொருள் விற்பனை றெக்க கட்டி பறக்குது!

 சென்னை மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், ஒன்பது மாதங்களில், 100 கோடி ரூபாய் அளவிற்கு போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளனர். மேலும், வெளிநாட்டவர் உட்பட, 40க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், உள்ளூர் போலீசார் உதவியுடன் நடப்பதால், இளைய தலைமுறை, போதைக்கு அடிமையாகி, சமுதாயத்தை சீரழித்து வருகிறது.

 
பிற நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து, கடத்தி வரப்படும், கஞ்சா, கொகைன், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள், சென்னை புறநகர் பகுதிகள் வழியாக, சென்னைக்குள் விற்பனைக்கு நுழைகின்றன. மாதவரம், செங்குன்றம்பகுதிகளில், குடிசை தொழில் போல, போதை பொருட்கள் கடத்தல் நடப்பதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.உள்ளூர் போலீசார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, கணிசமான பணம் கிடைப்பதால், அவர்கள் இதை கண்டுகொள்வதில்லை. 
தற்போது, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலாக, போதை பொருட்கள் விற்பனை மாறி வருகிறது.றெக்க கட்டி பறக்கும்போதை பொருட்கள் விற்பனையால், இளைய தலைமுறையினர், தங்கள் வாழ்க்கையை சீரழித்து, சமுதாயத்தையும் கேள்வி குறியாக்கி வருகின்றனர்.போதை பொருள் விற்பனையை, போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.எளிய கல்வி முறை, விளையாட்டு, சமூக கலாசாரம் உள்ளிட்டவை வழியாக, இளம் தலைமுறையை போதை பழக்கத்தில் இருந்து மீட்கமுடியும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு துறை, நுண்ணறிவு தகவல் மற்றும் திடீர் சோதனைகள் மூலம், கைது, பறிமுதல், வழக்கு பதிவு செய்தாலும், போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
இளைய தலைமுறையினரின் வேகமான வாழ்வியல் நடைமுறை, கல்வி, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் ஏற்படும், மன அழுத்தங்களை பயன்படுத்தி, சமூக விரோதிகள், போதை பொருளின் தேவையை அதிகரித்து, வலை விரிக்கின்றனர்.வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், நகை பறிப்பு, திருட்டு, கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட, போதை பொருளின் துணை தேவைப்படுகிறது.சில மாதங்களுக்கு முன், சிறுமியை பாலியல் கொடுமை செய்து எரித்தும், தாயை, நகைக்காக கொலையும் செய்த ஜஸ்வந்த் என்பவனும், போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவன் என்பது குறிப்பிடத்தக்கது.போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பு வழக்கில், உள்ளூர்போலீசார் முழுமையான ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்கள், 'விலை' போவதே, பல்வேறு புதிய குற்றங்களுக்கு காரணமாகிறது.ஆனால், சில அதிகாரிகள்கண்டிப்பானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், போதை பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே உள்ளனர்.இந்த நிலையில், தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், அதிரடிசோதனை, கடத்தல் தடுப்பு பணியுடன், பள்ளி, கல்லுாரிகளில், போதை பொருள் தீமை குறித்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக, சென்னை மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், ஒன்பது மாதங்களில், 100 கோடி ரூபாய் அளவிற்கு போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளனர்.
வெளிநாட்டவர் உட்பட, 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய, 10க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க, நேர்மையான போலீசார், தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து, இளைஞர்களை மீட்டு, நாட்டிற்கு நன்மை செய்யவேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. விழிப்புணர்வுபோதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்கள் மீது, தொடர் கண்காணிப்பு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன் தீமை குறித்த விழிப்புணர்வை, பள்ளி பருவத்தில் இருந்தே, செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு, சமூக கலாசாரம் ஆகியவற்றில், அனைத்து, மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான், போதை பொருளின் தேவையும், அதன் மீதான ஆர்வமும் குறையும். 
 
அதுதான், சமூக பாதுகாப்புக்கான ஒரே வழி. எங்கள் துறையும், பள்ளி, கல்லுாரி நிகழ்வுகளில், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.ஏ.புரூனோ, மண்டல இயக்குனர், போதை பொருள் கடத்தல் தடுப்பு துறை, சென்னை மண்டலம்.எங்கெங்கு? ஜனவரி முதல், செப்டம்பர் வரை, தமிழகத்தில் மட்டும், 2,469 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 20 பேரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர் ஜனவரி - மார்ச்சில், திருச்சி விமான நிலையம்அருகே, 25 கிலோ, 'சூடா எபெக்ட்ரின்' என்ற போதை பொருள் கடத்திய, மூன்று பேர் கைது பிப்ரவரி - மார்ச்சில், சென்னையில், 17 கிலோ, 'கேடமைன்' என்ற போதை பொருள் பறிமுதல் செய்து, நான்கு பேர் கைது ஏப்ரல், மற்றும் செப்டம்பரில், சென்னையில், 6 கிலோ, 'கொகைன்' பறிமுதல் வழக்கில், போர்ச்சுகல் நாட்டவர் உட்பட, இரண்டு பேர் கைது சென்னையில், மார்ச்சில், 'மெத்தாம் பிட்டமின்' 835 கிராம் சிக்கியது. ஒருவன் கைது பிப்ரவரியில், 110 கிராம், 'ஹெராயின்' சிக்கியது. 
 
சென்னையில், ஒருவன் கைது ஏப்ரலில் சிக்கிய, 3 கிலோ, கொகைன் போதை பொருளை, சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக, அதை கடத்தி வந்த, போர்ச்சுகல் நாட்டு கடத்தல்காரன், விசாரணையில் கூறியிருக்கிறான் குறைந்த அளவிலான, ஹெராயின், 'கூரியர் சர்வீஸ்' மூலமாக கடத்தப்பட்டு உள்ளன.விவசாயத்தின் வீழ்ச்சிகொகைன், ஹெராயின் போன்ற போதை பொருள் கடத்தலில், வெளிநாட்டவர் உட்பட இந்தியர்களும் ஈடுபடுகின்றனர். கஞ்சா கடத்தலில், மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபடுகின்றனர். அதற்கு காரணம், விவசாயம், வேலை வாய்ப்பின்மை என, தெரிய வந்துள்ளது.ஓடை, கால்வாய், ஆறு, ஏரி குளங்கள் இருந்தும், அவற்றின் மீதான ஆக்கிரமிப்பு, சீரமைக்கப்படாத கட்டமைப்பு ஆகியவற்றால், விவசாயத்திற்கு தேவையான மழை நீரை, தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், விவசாயம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இன்றி, 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதற்காக, ஆந்திரா, கர்நாடகாவிற்கு சென்று, சில நாட்கள் தங்கியிருந்து, கஞ்சா கடத்தி வருகின்றனர்.குறைந்தபட்ச பணத்திற்கு ஆசைப்பட்டு, வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் சிக்குவர். ஆனால், கடத்தலின் முக்கிய புள்ளிகள் சிக்குவதில்லை. அவர்கள், அரசியல் செல்வாக்கு பெற்ற பெரும்புள்ளிகளுடன், தொடர்பு வைத்து கொண்டு, வேறு தொழிலாளர் மூலம், தங்களது கடத்தலை நடத்துகின்றனர்.