img/728x90.jpg
கன மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில்

கன மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில்

மதுரை, தேனி மாவட்டம் வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு, திண்டுக்கல் மாவட்டம் சண்முகாநதி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் கன மழை பெய்தது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி வழிந்தோடுகிறது.பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 1.4 மி.மீ., தேக்கடி 5.6, கூடலுார் 26, சண்முகாநதி 11, உத்தமபாளையம் 6.4, வீரபாண்டி 11, மஞ்சளாறு 44, மருதாநதி 10.5, சோத்துப்பாறை 44, பேரணை 17.2, குப்பணம்பட்டி 10, ஆண்டிபட்டி 11.6, மதுரை 21, மேட்டுப்பட்டி 6, கள்ளந்திரி 5, சிட்டம்பட்டி 5.2, விரகனுார் 2.1, கொடைக்கானல் 0.8, மழையும், அதிகபட்சமாக சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 44 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1,556 கன அடி, வெளியேற்றம் 1,600 க.அ., வைகை வரத்து 1,473, வெளியேற்றம் 1,190, சோத்துப்பாறை வரத்து 184, வெளியேற்றம் 181, மஞ்சளாறு வரத்து 170, வெளியேற்றம் இல்லை. மருதாநதி வரத்து 43, வெளியேற்றம் இல்லை. சண்முகாநதி, சாத்தையாறு அணைகளுக்கு நீர் வரத்து, வெளியேற்றம் இல்லை.