img/728x90.jpg
மத்தியில் அடுத்து யார் ஆட்சி தெரியாது என்கிறார் சிதம்பரம்

மத்தியில் அடுத்து யார் ஆட்சி தெரியாது என்கிறார் சிதம்பரம்

 காரைக்குடி, ''பா.ஜ.,வுக்கு இந்திய பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தகுதி குறைவு. அடக்குமுறை மட்டுமே அவர்கள் கொள்கை,'' என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான சிதம்பரம் கூறினார்.அவர் கூறியதாவது:காங்., ஆட்சியில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல்., நிறுவனத்தை புறக்கணித்து, தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசனை சொல்லவில்லை. பா.ஜ., அரசு செய்த தவறுக்கு காங்., எப்படி பொறுப்பாகும். மத்தியில் அடுத்த ஆட்சி வந்தால்தான் கோப்புகளை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்து யார் வருவார் என எனக்கு தெரியாது. காங்., ஆட்சியில் நிர்ணயித்த விலையை காட்டிலும் தற்போது 9 சதவீதம் குறைவு என்கின்றனர். ஆனால் 36 விமானம் ஏன் வாங்குகிறீர்கள். 126 அல்லவா வாங்க வேண்டும்.நிர்மலா சீத்தாராமனுக்கு ராணுவ துறையில் என்ன ஆளுமை இருக்கிறது என தெரியவில்லை. பா.ஜ., ஆட்சியில் மூன்று ராணுவ அமைச்சர்கள் இருந்துள்ளனர். உருப்படியாக எதுவும் செய்யவில்லை, என்றார்.