img/728x90.jpg
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதிய உத்தரவு - ஸ்டெர்லைட்டுக்கு இடம் ஒதுக்கிய வழக்கு!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதிய உத்தரவு - ஸ்டெர்லைட்டுக்கு இடம் ஒதுக்கிய வழக்கு!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது யூனிட்டிற்காக இடம் ஒதுக்கபட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்த சிப்காட் உத்தரவுக்கு இடைகாலத் தடை விதி்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 
சிப்காட் வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் பிரிவுக்கு முறையாக நிலம் குத்தகைக்கு வழங்கியபோது, அந்தக் குத்தகையை ரத்துசெய்ய அதிகாரம் கிடையாது. எனவே, 342.22 ஏக்கர் குத்தகை ஒப்பந்தத்தை ரத்துசெய்து பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக சத்யப் பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்
 
இந்த மனு, உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. 'அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 13 பேரை காவல் துறையினர் சுட்டுக் கொலைசெய்தனர். அதையடுத்து, மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இரண்டாவது ஆலைக்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்த உத்தரவை ரத்துசெய்துள்ளது. இது, அரசின் கொள்கை முடிவாகும் என்றார். ஆனால், ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் முறையான அனுமதி பெற்று அதற்கான முழுதொகையைச் செலுத்திவிட்டோம். மேலும், எந்த முன் அறிவிப்பும் இன்றி ஒப்பந்தத்தை ரத்துசெய்வது சட்ட விரோதம். எனவே, இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களைப் பதிவுசெய்த நீதிபதி, சிப்காட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுகுறித்து அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.