• :
  • :
களத்தில்

தமிழகம் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
 
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் மழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி மடுகரை, வில்லியனூர், மதகடிகப்பட்டு,தவளகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி,அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ளும் படியும் கலெக்டர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம், நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.