• :
  • :
களத்தில்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.யால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை காலி செய்வதில் இழுபறி நீடிப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.யால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை காலி செய்வதில் இழுபறி நீடிப்பு

 தமிழக சிறைத் துறைக்கு ஒதுக் கப்பட்ட இடத்தில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிர மிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற கெடு நேற்று முன்தினம் முடிந்த நிலை யில் அந்த இடத்தை ஒப்படைப் பதில் இழுபறி நிலவுகிறது.

 
தஞ்சாவூர்- திருச்சி சாலையில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அதை ஒட்டி சிறைத் துறைக்கு அளிக்கப்பட்ட 58 ஏக்கர் அரசு நிலத்தில், 31 ஏக்கரை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. சாஸ்த்ரா நிர்வாகம் அவற்றை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி, தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கின் மீது சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
 
அதில், அக்.3-க்குள் அங்குள்ள கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக சிறைத்துறை நிர்வாகம், அந்த இடத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து, 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து, சாஸ்த்ரா தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள், மாணவிகள் விடுதி கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங் கள் கட்டப்பட்டுள்ளதால் அந்த இடத்தை தங்களுக்கே அரசு அளிக்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த தொகையை தரத் தயாராக உள்ளோம். திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உரிய அமைப்பி டம் (அரசு) அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனத் தெரிவித் திருந்தது.
 
இதையடுத்து, உயர் நீதிமன்றம் அளித்த காலக்கெடுவான அக்.3-ம் தேதிக்குள் கட்டிடங்களை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என தஞ்சாவூர் வட்டாட்சியரால் சாஸ்த்ரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது. இந்தக் காலக் கெடு நேற்று முன்தினம் (அக்.3) முடிவ டைந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் மூலமாக, நினைவூட்டல் கடிதம் சாஸ்த்ராவிடம் அளிக்கப்பட் டது.
 
அதைப் பெற்றுக்கொண்ட சாஸ்த்ரா நிர்வாகம், குறிப்பிட்ட அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் விடுதிகளில் 2,500 மாணவிகள் தங்கியுள்ளதாகவும், அனைவருக்கும் மாற்று இடம் உடனடியாக ஏற்பாடு செய்ய இயலவில்லை எனவும் கூறியதாக தெரிகிறது. மாணவிகள் விடுதியைத் தவிர மற்ற கட்டிடங்களை ஒப்படைக் கத் தயாராக இருப்பதாகவும், திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
விரைவில் சீல் வைப்பு?
 
இதையடுத்து, மாவட்ட நிர்வா கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ததாகவும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கட்டிடங்களை கையகப்படுத்த சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து விட்டு வந்ததாகவும் வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித் தன.
 
இதுகுறித்து, கருத்தறிய தஞ்சாவூர் வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், சாஸ்த்ரா பல்கலைக்கழ கம் ஆகிய வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது யாரும் கருத்து தெரிவிக்க முன்வர வில்லை.