img/728x90.jpg
கனமழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

 
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின் னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பி யாறு அணைப் பகுதியில் 105 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழை யால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
 
குற்றாலம் அருவிகளில் நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளம் குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது. தொடர் மழை காரணமாக கோவில்பட்டி மற்றும் எட்டயபுரத்தில் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
 
கரை திரும்பும் மீனவர்கள்
 
ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் குமரி மாவட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்றனர். எனினும், கேரளா, லட்சத்தீவில் தங்கி மீன்பிடிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை. இவர்களுக்கு இந்திய கடற்படை மூலம் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்றும் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
கடந்த ஒக்கி புய லால் அதிக பாதிப்புக்குள்ளான பகுதியாக கண்டறியப்பட்ட 78 இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். புயல் எச்சரிக்கை காரண மாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.