• :
  • :
களத்தில்

மோசமான வானிலையால் அந்தமான் விமானம் தாமதம்

மோசமான வானிலையால் அந்தமான் விமானம் தாமதம்

 அந்தமானில் நிலவிய மோசமான வானிலையால், அங்கு தரையிறங்க முடியாமல், 'ஏர் இந்தியா' விமானம் மீண்டும், சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.சென்னையில் இருந்து, நேற்று காலை, ௫:௩௦ மணிக்கு, ௧௦௬ பயணியருடன், ஏர் இந்தியா விமானம், அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்தமானில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், அங்கு, விமானத்தை தரையிறக்க முடியவில்லை.இதனால், அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,யின் உத்தரவுப்படி, மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, காலை, ௮:௩௦ மணிக்கு தரையிறங்கியது. அந்தமானில் வானிலை சீரானவுடன், விமானம் புறப்பட்டு செல்லும் என, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.விமானங்கள் தாமதம்சென்னையில், நேற்று முன்தினம் இரவு முதல், பெய்து வரும் கன மழையால், சென்னையில் இருந்து, துாத்துக்குடி, டில்லி, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா உள்ளிட்ட நக ரங்களுக்கு செல்லும் விமானங்கள், ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன