img/728x90.jpg
கர்ப்பிணி உதவி தொகை வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்

கர்ப்பிணி உதவி தொகை வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்

 கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 
ஏழை, எளிய கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்துக்காக தமிழக அரசால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப் பேறு நிதியுதவி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ரூ.18 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை 4 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற கிராமப்புறங் களில் கிராம சுகாதார செவிலியர் களிடமும், நகர்புறங்களில் நகர சுகாதார செவிலியர்களிடமும் விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்நிலையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜ்னா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை தமிழக அரசின் உதவித் தொகையுடன் இணைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கான உதவி தொகைக்காக விண்ணப்பித் தவர்களுக்கு உதவி தொகைகள் வழங்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துகளை பெறமுடியாமல் பரிதவித்து வந்தனர். இந்நிலையில், இணைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கர்ப்பிணிகளுக்கான உதவி தொகை வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
 
இது குறித்து, பொதுசுகாதார துறை இயக்குநர் கே.குழந்தைசாமி கூறும்போது, “தற்போது கர்ப்பிணி களுக்கு உதவி தொகைகள் வழக்கம் போல் வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கர்ப்பிணி களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப் பட உள்ளது. மீதமுள்ள, ரூ.14 ஆயிரம் தொகை பல்வேறு காலக்கட்டங்களில் பிரித்து வழங்கப்படும்” என்றார்.