• :
  • :
களத்தில்

நக்கீரன் கோபால் கைது பின்னணி?- எப்.ஐ.ஆர் விபரம்

நக்கீரன் கோபால் கைது பின்னணி?- எப்.ஐ.ஆர் விபரம்

 நக்கீரன் கோபால் கைது பின்னணி?- எப்.ஐ.ஆர் விபரம்

 
ஆளுநரின் துணைச்செயலாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர்.
 
ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இன்று காலை பூனே செல்ல விமான நிலையம் வந்த நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஆசிரியர் கோபாலை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
 
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை முடிக்கப்பட்டு அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். தற்போது நக்கீரன் கோபால் கைதுக்கான காரணம் என்ன, யார் புகார் அளித்தது. புகாரைப் பெற்றது யார், என்ன செக்‌ஷன் போன்ற விபரங்கள் அடங்கிய எப்.ஐ.ஆர் காப்பி வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்த விபரம் வருமாறு:
 
ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் என்பவர் காவல் ஆணையருக்குப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு அலுவலகம் அனுப்பப்பட்டு அங்கிருந்து திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜாம்பஜார் காவல் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
செங்கோட்டையன் அளித்துள்ள புகாரில் ஏப். 22 இதழில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு கட்டுரை வெளியாகி உள்ளது. இதுபற்றிய புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
இதன் அடிப்படையில் நக்கீரன் கோபால் (59) மீது பிரிவு ஐபிசி 124-ன் (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் மீது அவர்கள் பணியில் குறுக்கிடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு ஆகும்.