• :
  • :
களத்தில்

திருமணிமுத்தாற்றில் பொங்கியது நுரை

திருமணிமுத்தாற்றில் பொங்கியது நுரை

 வெண்ணந்துார்: மதியம்பட்டி, திருமணிமுத்தாற்றில், 10 அடிக்கு ரசாயன நுரை வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த, மதியம்பட்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி வழியாக, திருமணிமுத்தாறு செல்கிறது. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்றன.மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்கிறது. திருமணிமுத்தாற்றில் நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் முதல், ஆற்றில் வெள்ளை நிறத்தில் நுரை பொங்க துவங்கியது. நேற்று, மிக அதிகமாக, கிட்டத்தட்ட, 10 அடி உயரத்துக்கு பொங்கியது. அது, சாலையையும் ஆக்கிரமித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிறிது நேரம் கழித்து, நுரை குறைந்த பின், போக்குவரத்து துவங்கியது. மழை பெய்து தண்ணீர் வரும்போதெல்லாம், இந்த பிரச்னை வருகிறது. இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'ரசாயனம் கலந்து வருவதால், ஆற்றில் நுரை பொங்குகிறது. மேலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே, ரசாயன சாயக்கழிவுகளை ஆற்றில் விடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.