img/728x90.jpg
சிலை கடத்தல் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் விசாரணையை மட்டும் சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன்?

சிலை கடத்தல் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் விசாரணையை மட்டும் சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன்?

 சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல், வழக்கு விசாரணையை மட்டும் சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்கால கோயில் சிலைகளைக் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சரியாக செயல்படாததால் அதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது.
 
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இதே அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நடந்த வாதம்:
 
மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்: சிலை கடத் தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா தொடர்ந்து அறநிலையத் துறையின் பணிகளில் தலையிடுவதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகுதான் அவரை தற்போது இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை எடுக்க தமிழக அரசுக்கு 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாக இல்லை. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்காது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
 
நீதிபதிகள்: சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங் களை முறையாக மத்திய அரசுக்கு அனுப்பாமல், வழக்கு விசாரணையை மட்டும் சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது ஏன்? தங்களுக்கு தேவை என்றால் ஒரு மணி நேரத் தில் அரசாணை பிறப்பிக்கப்படு கிறது. தேவையில்லை என நினைத்தால் 3 மாதங்கள் வரை காலதாமதம் செய்கிறது.
 
தமிழக அரசு தரப்பு வழக் கறிஞர்: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உடனடி யாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கு விசார ணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.