• :
  • :
களத்தில்

பெட்ரோல், டீசல் விற்க தடை - தொழிலாளர் துறை நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விற்க தடை - தொழிலாளர் துறை நடவடிக்கை

 பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விற்ற 127 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 
இது தொடர்பாக அத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் அறிவுரையின் பேரில் அக்டோபர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகத் தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் பங்க்குகளில் அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் (செயலாக்கம்) தலைமையில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல், டீசல் பங்க்குகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சென்னை மண்டலத்தில் - 34, கோவை மண்டலத்தில் - 24, திருச்சி மண்டலத்தில் 30, மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் என 127 நிறுவனங்கள் அளவு குறைவாக விற்றது கண்டறியப் பட்டது. அவ்வாறு சட்ட விதிக ளுக்கு முரணாக அளவு குறை வாக விற்ற பங்க்குகளில் விற் பனை தடை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில், அந்தந்த நிறுவனங் களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அள வினை பயன்படுத்தி சரிபார்த் துக் கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளது.
 
பெட்ரோல், டீசல் அளவு குறைவு, நியாயவிலைக் கடை களில் பொருட்கள், மண்ணெண் ணெய் அளவு குறைவு, பொட்டல பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு அதிகமாக கடைகளில் விற்பனை செய்வது போன்ற குறைபாடுகளை கண்ட றியும்போது, நுகர்வோர், ‘TN-LMCTS’ என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்